கிளிநொச்சியில் முஸ்லிம்களின் உடல் தகனத்துக்கு எதிராக போராட்டம்!

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யாது அடக்கம் செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமயங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.