உடல் எடையை குறைக்க இஞ்சியை இப்படி பயன்படுத்தி பாருங்க… நம்ப முடியதா மாற்றம் உங்கள் உடம்பில் நிகழுமாம்

நமது அன்றாடம் சமையலில் பயன்படும் ஒரு மருத்துவ பொருள் தான் இஞ்சி. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை வைத்தியங்களில் பெருமளவில் பயன்படக் கூடியது.

இதில் ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைய உள்ளன.

இதில் பல்வேறு ஆரோக்கிய குணங்களும், மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவிபுரிகின்றது.

இஞ்சி உங்க பசியை அடக்குவதன் மூலம் கலோரி எரிப்பை அதிகரிக்கக் கூடும். இதனால் பருமனானவர்கள் எடை இழப்பை பெற முடியும்.

அதுமட்டுமின்றி இஞ்சியில் இஞ்சி மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.

அவை உங்க உடலில் உடல் பருமனுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும் செயலை செய்கிறது. இவை நம் மெட்டா பாலிசத்தை துரிதப்படுத்துகிறது. இது எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.

அந்தவகையில் இஞ்சியை எப்படி உடல் எடையை குறைக்க பயன்படுத்துவது என இங்கு பார்ப்போம்.

  • நீங்கள் எடையை குறைக்க நினைத்தால் இஞ்சி தேநீர் மற்றும் லெமன் சாற்றில் சிறுதளவு இஞ்சி சாறு சேர்ப்பது குறைந்த கலோரிகளை தந்தாலும் நீண்ட நேரம் பசிக்காது. ஒவ்வொரு நாளும் 2-3 முறை இஞ்சி லெமன் பானம் குடியுங்கள்.இஞ்சி தேநீரில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேநீர் குளிர்ந்த பிறகு குடித்து வாருங்கள். ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உங்க உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

    உங்க எடையை குறைக்க இஞ்சியை சிறிய, மெல்லிய துண்டுகளாக நறுக்கி க்ரின் டீயில் போட்டு கொதிக்க வையுங்கள். இந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என குடித்து வாருங்கள்.

    இஞ்சி நீரில் சிறிது தேன் மற்றும் லெமன் சாறு சேர்த்து கலந்து புதினா இலைகள்,1-2 ஐஸ் கட்டிகளை சேருங்கள். இது உங்க பசி வேதனையை அடக்கி உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு ஒரு முறை என இஞ்சி சாறு சாப்பிட்டு வாருங்கள்.