கிளிநொச்சியில் சேதமடைந்த பாலத்தை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் உருத்திரபுரம் கிராமங்களுக்கான இணைப்பு வீதியில் வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்த தற்காலிக பாலம் அமைந்துள்ள பகுதியில் நிரந்தர பாலம் ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகளை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாலம் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தினால் சேதமாகியுள்ளது. இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மழை வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட குறித்த பாலத்தினை நிரந்தரமான பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நிதி உதவியில் ரிடெவ் (Ridef) திட்டத்தின் கீழ் குறித்த பாலம் அமைக்கும் பணிகள் நடைமுறைப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ள குழுவினர் மற்றும் பொறியியலாளர்கள், கரைச்சி பிரதேச சபையினர் குறித்த பகுதியை இன்று (08) பார்வையிட்டனர்.