பெண் பொலிஸாருக்கு கொரோனா உறுதி!! -35 பொலிஸார் தனிமைப்படுத்தலில்-

பெண் பொலிஸாருக்கு கொரோனா உறுதி!! -35 பொலிஸார் தனிமைப்படுத்தலில்-

ஹோமாஹமவில் பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் கடமையாற்றிய 35 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோமாஹவி;ன் நுகேகொட நான்காவது பிரிவு பொலிஸ்நிலையத்தை சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு விரிவுரைக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது குறிதத் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 35 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்