கிளிநொச்சியில் வெள்ளத்தில் முழ்கிய வீடுகள் பலர் பாதிப்பு (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு, எவரும் உதவ முன்வரவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், வருடம்தோறும் தாம் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பூநகரி கரியால நாகபடுவான் மக்களும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன், மக்களின் தற்காலிக வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.