கிளிநொச்சி வைத்தியசாலையில் 40 கொரோனா நோயாளர்கள் அனுமதி

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம் அந்த வகையில் கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலைக்கு இன்று சுமார் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வந்தது அங்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேரும்.

முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

200 பேர் சிகிச்சை பெறும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் உள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை முதற்கட்டமாக இன்று 40 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை வட மாகாணத்திற்கான தொற்று நோயியல் வைத்தியசாலை இயங்கவுள்ளது.