கா. பொ. த சாதாரணதர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை..

கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையை உத்தேசிக்கப்பட்ட தினத்தில் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த நாட்களில் பரீட்சையை நடத்த முடியுமா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.