கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் சென்று வந்த இடங்கள் தொடர்பில் வெளியான தகவல் : பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

கிளிநொச்சியில் இன்று மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 72 வயதான முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் இன்று 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

72 வயது முதியவர் தொற்றுடன் அடையளம் காணப்பட்டபோது, அவர் தொற்றிற்குள்ளான விதம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டிருந்தது. அவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு அண்மையில் இருந்த தண்ணீர் போத்தல் விநியோக மையத்தின் மூலம், அல்லது மாகா நிறுவனத்தின் பணியாளர்கள் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது.

இன்றைய பிசிஆர் முடிவுகளின்படி, முதியவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனை நிலையத்தின் அருகிலுள்ள தண்ணீர் விநியோக மையத்திற்கு அருகிலுள்ள 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மையத்தின் மூலமே முதியவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளர் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த பகுதியிலுள்ள இன்னொரு வர்த்தக நிலையத்தில் பணிபுரிபவர், அருகில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் முதலாவது தொற்றாளரின் மருமகன் ஆகியோர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கெரோனா தொற்றின் தோற்றுவாய் தண்ணீர் விநியோக மையம் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தன்மை பற்றிய விபரத்தை வழங்க கோரப்பட்டுள்ளனர். cold, srilankan acqua, nethra ஆகிய நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்களின் மொத்த விற்பனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.