கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிக் காரணமாக தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை வியாழக்கிழமை இரவு 9மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, பெலவத்த மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.