19 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி பாடசாலை ஒன்றிற்கு பெருமை சேர்த்த மாணவி; குவியும் வாழ்த்துக்கள்….!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகியது.

இந் நிலையில் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 19 வருடங்களுக்கு பின்னர் மாணவி ஒருவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளார்.

டேவிற்குமார் தனஞ்சயா என்ற மாணவனே 178 புள்ளிகளைப் பெற்று இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் பின் தங்கிய இந்த பிரதேசத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் கல்வியினைக் கற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த நிலையில் பெற்றோருக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடிக்கொடுத்த மாணவி டேவிற்குமார் தனஞ்சயாவிற்கு கிளிநொச்சி நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.