இலங்கையில் வாகன இறக்குமதி தடைக்கு நடக்கப்போவது என்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (17) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க உள்ளார்.

இதன்போது ஏனைய பொருட்களின் இறக்குமதிக்கான தடை நீடிப்பதைப் போன்று வாகனங்களுக்கான இறக்குமதியும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது.

இந்த தடை 2021 ஆம் ஆண்டிற்கும் தொடரும். பெர்மிட் வைத்திருப்பவர்கள் தங்களது அனுமதிகளைப் பயன்படுத்தவும், சந்தையில் தற்போதுள்ள வாகனப் பங்குகளிலிருந்து வாகனங்களை வாங்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.