பயணிகள் பேருந்துகள் தொடர்பில் கடுமையான அமுலாகும் சட்டம்!

சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றாமல் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அவ்வாறான பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரம் முதல் இந்த நடை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறையை மீறி போக்குவரத்தில் ஈடுபட்ட 5 பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.