கிளிநொச்சி பகுதியில் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்த தற்காலிக வீட்டினை சீர்செய்து கையளித்த இராணுவத்தினர்

கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்த தற்காலிக வீட்டினை இராணுவத்தினர் சீர்செய்து கையளித்துள்ளனர்.

பெரிய பரந்தன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீசிய கடும் காற்றினால் தற்காலிக வீடொன்றின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதை அடுத்து குறித்த குடும்பம் தங்களது ஆடுகளை கட்டுவதற்காக அமைத்திருந்த கொட்டிலில் தங்கியிருந்த நிலையில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் கிளிநொச்சி பிராந்திய தளபதியின் நேரடி வழிகாட்டலில் அவர்களது தற்காலிக வீடு புனரமைக்கப்பட்டுள்ளது.