கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவரொருவர் உட்பட மூவர் காயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் வலயக்கல்வி பணிமனைக்கு அருகில் திடீரென டிப்பர் வாகனமொன்றின் தடுப்பு (Break) பிரயோகிக்கப்பட்டதால் அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி குறித்த டிப்பரின் பின்பகுதியில் மோதி விபத்துக்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவரொருவர் உட்பட மூவர் காயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.