கிளிநொச்சியில் 450க்கு மேற்பட்ட பேர் தனிமைப்படுத்தல் – சுகாதார பிரிவினர்

கிளிநொச்சியில் 450க்கு மேற்பட்ட பேர் தனிமைப்படுத்தல் – சுகாதார பிரிவினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 487 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, கிளிநொச்சி மாவட்ட மக்களை விழிப்பூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.