கிளிநொச்சி உருத்திரபுரத்தினை சேர்ந்த யுவதி 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமோசடி : யுவதியை கைது செய்த பொலிஸார்

கிளிநொச்சி உருத்திரபுரத்தினை சேர்ந்த யுவதி 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமோசடி : யுவதியை கைது செய்த பொலிஸார்

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதியொருவர் வவுனியா கந்தபுரத்தை சேர்ந்த இளைஞரொருவரிடம் 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமோசடி பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டார் நாட்டில் தொழில் செய்து வரும் இளைஞரிடம் மேற்படி யுவதி வீடு கட்டுவதற்கென 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை கடனடிப்படையில் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் யுவதி அதைத் திருப்பிச் செலுத்தாததை அடுத்து இது தொடர்பில் கிளிநொச்சி யுவதியை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.