கிளிநொச்சியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை மடக்கிய பொலிஸார்

முல்லைத்தீவு மாங்குளம் நகர்ப்பகுதியில் 800 கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவரை மாங்குளம் பொலிசார் கைது செய்தனர்.

நேற்று மாலை மாங்குளம் நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை மாங்குளம் பொலிஸார் சோதனை செய்தபோது அவரது உடைமையில் 800 கிராம் கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம் என்பன காணப்பட்டுள்ளன.

அவரை கைது செய்த பொலிஸார் இன்று 01.11.2020 முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்