கிளிநொச்சி மீன் சந்தையில் 60 பேரிடம் பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி பொதுச் சந்தையின் மீன் வியாபாரத்திற்கான பகுதியில் 60 வியாபாரிகளிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் இன்று(27) பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மேற்படி மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னாயத்த நடவடிக்கையாக கிளிநொச்சி மீன் சந்தையிலும் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.