Kilinochchi NET

தினமும் ஊதுவர்த்தி ஏற்றுகிறீர்களா? அப்போ இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

இறை வழிப்பாட்டின் போது ஊதுபத்தியை ஏற்றி வைப்பது நம்மில் பலரின் வழக்கமாகும்.

ஊதுபத்தி ஏற்றி வழிப்படுவதின் காரணம் என்ன என்பதை இந்தப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஊதுபத்தியை ஏற்றியவுடன் அதன் வாசம் இல்லம் முழுவதும் பரவும். இது இல்லத்தில் தெய்வ கடாச்சத்தை அருளுகிறது.

ஊதுபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து சாம்பல் தான் மிஞ்சும். தன்னையே சாம்பலாக்கிக் கொண்டு, மற்றவர்களுக்கு சுகந்தம் தரும் ஊதுபத்தி தியாகத்தின் வெளிப்பாடு.

அதே போல இறையை நேசிக்கும் பக்தர்களின் சிந்தனை முழுவதும் பொதுநலம் கொண்டாதாக இருக்க வேண்டும்.

ஊதுபத்தி சாம்பலானாலும் மணம் மிஞ்சி இருப்பதை போல நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களின் மனங்களில் நிறைந்திருக்க வேண்டும்.