Kilinochchi NET

13 வ.யது மகளை கர்ப்பமாக்கிய தந்தை…. ஆண் குழந்தையை பெற்றெடுத்த மகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45) இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர்.சில வருடங்களுக்கு முன்பு கணவர் சங்கரின் கொடுமை தாங்க முடியாமல் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். அதனையடுத்து மகன் மகளுடன் சங்கர் வசித்து வந்தார். இல்லைதான் அவரது மகளுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது, அதனையடுத்து, அந்த பெண் அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது, திருமணமே ஆகாத, வெறும் 13 வயதே ஆன சிறுமிக்கு குழந்தை பிறப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் வேலூர் சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர், நடந்தவை குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கர்ப்பத்திற்கு தன் தந்தையே காரணம் என்று அந்தசிறுமி கூறினார். அதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.மனைவி பிரிந்து சென்று, தனிமையில் இருந்த தந்தை மகளை தவறாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்,

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை சங்கரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையால் கற்பழிக்கப்பட்ட 13 வயது மகள் குழந்தை பெற்றெடுத்துள்ளார் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.