Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை ரேகா நாயர் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் அரை நிர்வாணத்துடன் நடித்த காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுமட்டுமின்றி, சமீபகாலமாக சில நேர்காணலில் பேசுவது சர்ச்சயை கிளப்பி வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் தினத்தன்று ஆண்கள் குறித்து பேசியது சர்ச்சையாகி இருந்தது. இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் இவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கவிதை குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” நீங்கள் என்னுடைய முகநூல், இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளங்களில் நான் எழுதும் கவிதைகள் காதல் கலந்த காமமாக தான் இருக்கும்.
எனக்கு நிறைய பேரு காம சூ** நீ.. என பெயர் குடுத்துருக்காங்க.எனக்கு மறைச்சி வாழ தெரியாது. அதனால, எனக்குள் இருக்கும் காமத்தை காதல் வழியாக கொண்டு சென்று ஒரு உணர்வுக்குள் கொண்டு சேர்க்கிறேன்.
ஒரு அழகான ரோஜா பூவை ஒரு பெண்ணோ, அல்லது ஒரு ஆணோ பறித்து கொடுக்கும் போது உள்ள உணர்வும், அதை ரோஜாவை கொடுத்து எனக்கு உன்னை பிடிச்சிருக்கு நாம ஒண்ணா வாழலாமா என்று கேட்டு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அது போலி இல்லாமல் கொடுத்தால் அது தான் கா.மம். அப்படியான உணர்வுக்குள் நான் எப்போதுமே பயணிக்கிற ஆள்” என வெளிப்படையாக பேசியுள்ளர் ரேகா நாயர்.