Kilinochchi NET

இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி !

பிரேசிலில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த 18ம் திகதி ஒரு கன்று குட்டி பிறந்ததுடன் அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்ததுள்ளது.

இந்த கன்றுகுட்டி இரண்டு வாய், இரண்டு முக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதையடுத்து இரட்டை தலையுடன் பிறந்த அந்த பசுவை , அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்ப்பதற்காக அந்த வீட்டை நோக்கி வருகின்றனர்.

இதுபோன்று இரட்டை தலையுடன் பிறப்பதற்கு மரபணு மாற்றமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் பெரும்பாலும் அது நீண்ட நாள்கள் உயிருடன் இருப்பது கடினம். இந்நிலையில் பிறந்த 4 நாட்களில் இரண்டு தலையுடன் பிறந்த இந்த கன்று இறந்துள்ளது.

கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வதற்குள் கன்று இறந்துவிட்டதாக கால்நடை வளர்ப்பாளர் எலிடன் கூறியுள்ளார்.