கிளிநொச்சி உட்பட வட மாகாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்

கிளிநொச்சி உட்பட வட மாகாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்

வடமாகாணத்தில் குறிப்பிடத்தக்க நான்கு மாவட்டங்களாகிய யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வி பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பயிலும் எவருக்கும் கொவிட்-19 தொற்று இல்லாததை உறு‌தி செ‌ய்த பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து தனியான 3 பேருந்துகளில் 180 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களுடைய வீடுகளுக்கு வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வீடுகளுக்கு வந்தடைந்த மாணவர்களை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் கொவிட்-19 தொற்று உள்ளது என குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் 14 நாட்களுக்கு சுய தனிமைபடுத்தலுக்கு உள்ளாக்கி சமூகத்தில் இருந்து ஒதுக்கியும் வைத்துள்ளமையினால் மாணவர்கள் ஆகிய நாம் உளைச்சளுக்கு ஏற்படுத்தி உள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கொவிட்-19 உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தபட்ட வேறு இரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இன்றும் இந்த மாவட்டங்களில் தனிமை படுத்தப்படாது உள்ளனர். இது இவ்வாறு இருக்க தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்கியதன் உண்மை நிலை என்ன? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு தீர்க்கமான முடிவை பெற்றுத்தர முன் வருவார்களா? என்ற கேள்விக்குறியில் மாணவர்கள்