Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் மற்றும் நட்சத்திர மாற்றங்களும் அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்க்கையும் பாதிக்கிறது. சில ராசியினர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த மாதம் பல கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. அதன் படி, ஜூலை மாதத்தில் 12 ராசிக்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தரப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு ஜூலை மாத தொடக்கத்தில் சூரிய பகவான் இந்த ராசியில் அமர்ந்திருக்கிறார். ஜூலை 2ம் தேதி புதன் ராசிக்குள் நுழைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மறுபுறம், சுக்கிரனும் ஜூலை 13 ஆம் தேதி இந்த ராசிக்குள் நுழையப் போகிறார்.
எனவே மிதுன ராசிக்காரர்கள் ஜூலை மாதம் உச்ச பலனைப் பெறப் போகிறார்கள். வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.
ஜுலை மாதத்தில் அபரிமிதமான பலன்களை அடையப்போகும் ராசியினர்கள் இவர்களா?
கடகம்
கடக ராசியினர்களுக்கு வரும் மாதம் சுப பலன்களை தரப்போகிறது. சூரியன் ஜூலை 16ம் முதல் கடக ராசியில் பிரவேசிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடக ராசியினர்களுக்கு மரியாதை கூடும்.
மேலும், செல்வ குபேரின் அருளும் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
அதே நேரத்தில், ஜூலை 28-ம் தேதி மாத இறுதியில், கடகத்தில் வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியும் இந்த ராசிக்கு சுப பலன்களைத் தரும்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு ஜூலை மாததில் சிறப்பானதாக இருக்கும். ஜூலை 16-ம் தேதி முதல் சூரியன் இந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக வழியில் பண லாபம் உண்டாகும். மேலும், புதனின் தாக்கமும் இந்த ராசியில் தெளிவாகத் தெரியும்.