கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இருவர் கைது!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இருவர் கைது!

கிளிநொச்சி தருமபுரம் பிரமந்தனாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களும் அதன் சாரதியும் தர்மபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (11) தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அனுமதி பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு நபர்களும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.