கிளிநொச்சி இயக்கச்சியில் புலமைப்பரிசில் பரீட்சை எழுத இருந்த மாணவிக்கும் கொரோனா!

கிளிநொச்சி இயக்கச்சியில் புலமைப்பரிசில் பரீட்சை எழுத இருந்த மாணவிக்கும் கொரோனா!

இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மினுவாங்கொடையைச் சேர்ந்த தரம் 5 மாணவி, இன்று காலை புலமைப்பரிசில் பரீட்சை எழுதுவதற்குத் தயாராக இருந்தவேளையில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த மாணவி இயக்கச்சி சங்கத்தார் வயல் பாடசாலையில் பரீட்சை எழுதுவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அவருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனையின் அறிக்கை இன்று காலை வெளியாகியிருந்தது. அதில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதனால் அவர் பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லை.

குறித்த மாணவியின் தாயார் ஏற்கனவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.