கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மீது பொலிஸார் தாக்குதல் (வீடியோ)

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மீது பொலிஸார் தாக்குதல் (வீடியோ)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான ஜெயக்குமார் என்பவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வாணிபத்தில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட ஜெசிந்தன் தலமையிலான பொலிஸ் குழுவினர் சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.

மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள் ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டுள்ளார்கள்.

நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள் – கடையை இப்படியே விட்டு செல்ல முடியாது எனது உதவியாளர் வருகைக்காக காத்திருக்கின்றேன் என அவர் பதிலளித்துள்ளார்.

உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன? என்று கேட்டவாறு சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமா ரை இழுத்து வீழ்த்தி தாக்கியுள்ளார்.

இதனால் தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் சந்தை வர்த்தகருமான ஜெயக்குமார், கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

-ibctamil