தனியார் கல்வி நிலையங்களுக்கு கிளிநொச்சி அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தனியார் கல்வி நிலையங்களுக்கு கிளிநொச்சி அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

மறு அறிவித்தல் வரை அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்களை மேற்கொள்ளுமுகமாக மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடாத்தவேண்டாம் என்றும்; விழாக்கள், நிகழ்வுகளை குறைத்துக் கொள்ளுமாறும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள அரச அதிபர்; தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல்வரை உடனடியாக இடைநிறுத்துமாறும் இதன்போது தெரிவித்துள்ளார்.