Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
உங்கள் வீட்டில் பணம் கஷ்டம் அடிக்கடி ஏற்படுகின்றதா?.
அப்போ நீங்கள் இந்த தவறை உங்கள் வீட்டில் செய்து இருப்பீர்கள்.
தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க.
பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது.
ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது.
ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.
பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும்.
இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பணப்பெட்டி மற்றும் நகைப்பெட்டி
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும்.
இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம்.
இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.
இயந்திரங்கள் வைக்க கூடாத இடம்
எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள்.
மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
ஓட்டை குழாய்
வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள்.
இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.
பணப்பெட்டி முன் கண்ணாடி
பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.
பச்சை நிறம்
வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.