கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின !

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின !

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரிசோதனைகளில்வெளிவந்த முடிவுகளுக்கு அமைய எவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனதெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான யுவதியின் குடும்பத்துடன் தொடர்புபட்டவர்கள், கம்பஹா மாவட்டத்திலிருந்து பல்கலைகழக மற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தவர்கள் என பலரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் இதுவரை எவருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்துள்ளன.

மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் 57 நபர்களின் முடிவுகள் வெளிவந்தநிலையில் அவர்கள் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் தேவையற்ற வகையில் ஒன்று கூடுவது, பொது போக்குவரத்துக்களைபயன்படுத்துவது, வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவது போன்றவற்றைதவிர்க்குமாறும், சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறுஅதிகாரிகள் கோரியுள்ளனர்.