Kilinochchi NET

மகாலட்சுமியின் யோகத்தால் இந்த 3 ராசிக்கு தலை விதியே மாறப்போகிறதாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது அனைத்து ராசிக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஜூன் 18ம் தேதி சுக்கிரன் தன்னுடைய ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ளார்.

அதன்படி ஏற்கனவே புதன் கிரகம் உள்ளது. இதனிடையில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை உருவாகப்போவதால் மகாலட்சுமி யோகம் உண்டாகும்.
மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு ஜாதகத்தில் இரண்டாம் இடம் பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. இதனால் பண வரவு இருக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

நிதி நிலைமை மேம்படும். பேச்சு சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் இக்காலத்தில் ஆதாயமடைவார்கள். இந்தக் காலத்தில் மரகத ரத்தினம் அணிந்தால் அதிகப்படியான நன்மை கிடைக்கும்.

மகாலட்சுமியின் யோகத்தால் இந்த 3 ராசிக்கு தலை விதியே மாறப்போகிறதாம்!

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் நன்மையை அடைவார்கள். இந்த ராசிக்கு 11ம் வீட்டில் மகாலட்சுமி யோகம் அமைகிறது. இவை லாபம் மற்றும் வருமானத்துக்கான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் இவர்களின் வருமானமும் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். மகாலட்சுமியின் யோகத்தின்போது அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு லஷ்மி நாராயன யோகம் உண்டாகும், இந்த இடம் வேலை மற்றும் பணிக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பை பெறலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது.