Kilinochchi NET

சனி வக்ர பெயர்ச்சி 2022 – அடுத்தடுத்து இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…எச்சரிக்கை

சனிதான் ஆயுள் காரகன். ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி.

இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார். சனி சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார்.

சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சி 2022 – அடுத்தடுத்து இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…எச்சரிக்கை
மேஷம்

இனி சனிபகவான் பின்னோக்கி செல்வதால் பார்க்கும் வேலையில் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.

அவசரப்பட்டு வேலையை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.
ரிஷபம்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தற்போது சஞ்சரிக்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும்.

காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடல் ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருந்து வரும்.

சனி வக்ர பெயர்ச்சி 2022 – அடுத்தடுத்து இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…எச்சரிக்கை

மிதுனம் சனிபகவான் வக்கிரகால கால கட்டத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.

வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்காது.

மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு கடன்கள் பெருகி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை அதிகரிக்கும். சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

சிம்மம் சனிபகவான் கண்டச்சனியாக அமர்ந்து கவலைக்கு ஆளாக்கி வருகிறார். சனிபகவான் பின்னோக்கி நகர்வதால் சில நன்மைகள் ஏற்படும்.

உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.

சனி வக்ர பெயர்ச்சி 2022 – அடுத்தடுத்து இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…எச்சரிக்கை

கன்னி சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும்.

வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.
துலாம்

உங்களுக்கு தாய் மாமன்களின் அன்பும் அவர்களால் சகாயமும் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும்.

வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். சங்கடங்கள் நீங்க சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
விருச்சிகம்

சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருந்து வக்ர கதியில் செல்கிறார். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும்.

குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு

ஏழரை சனி ஆட்டிப்படைத்தது. தற்போது சனி பகவான் அதிசாரமாக மூன்றாவது வீட்டில் இருக்கிறார். சனிபகவான் வக்ர சஞ்சாரத்தினால் சிலருக்கு உயர்கல்வி பயிலவும் வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும்.

விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும்.

தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும்.
மகரம் சனி பகவான் பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும்.

கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும்.

பழைய நண்பர்களை சந்திப்பார்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும்.

சனி வக்ர பெயர்ச்சி 2022 – அடுத்தடுத்து இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து…எச்சரிக்கை

கும்பம் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். இனி சனிபகவான் பின்னோக்கி செல்வதால் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கொடுக்கும். வெளிநாடுகளில் இருந்து வரும் செய்திகள் சாதகமாக இருந்து வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் உற்சாகவும் இருப்பீர்கள். அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
மீனம்

சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இனி பின்னோக்கிச் செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும்.

விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும்.

முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.