கிளிநொச்சியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய ஹயஸ்..!

கிளிநொச்சி – நகரில் இன்று காலை 6.30 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்தின் முன் சக்கரம் காற்றுபோனதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் கிளிநொச்சி நகரில் வீதியின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் சேதமடைந்ததுடன் வீதி மின்விளக்கு கம்பமும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள்

தெய்வாதீனமாக எவ்வித பாதிப்பும் இல்லாது தப்பித்துக்கொண்டனர். ஆயினும் வாகனம்கடும் சேதங்களிற்கு உள்ளாகியுள்ளது. விபத்தினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பில்

வீதி அபிவிருத்தி அதிகார சபை மதிப்பீடு செய்து வருகின்றது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.