கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்பு

கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன.

இவ் மனித எச்சங்கள் பளை – தம்பகாமம் குளத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை மழை பெய்த பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்ற சிலர் அங்கு துர்நாற்றம் வீசியமை தொடர்பில் அவதானித்த போது நாடி உள்ளிட்ட சில எலும்புகள் உள்ளிட்ட மனித எச்சங்களும் சேட் மற்றும் சறம் போன்ற ஆடைகளையும் இனம் கண்டுள்ளனர்.