கிளிநொச்சியில் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று மாலை 3.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.