Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம். நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். குறிப்பாக, இன்றைக்கு கொரானா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம்
இந்த பயிற்சியை காலை மாலை 1 மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். .சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும் ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால் பாத வெடிப்பு வலி மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும் நடக்க இயலாதோறும் பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம் இதய நோய் ஆஸ்துமா கண் நோய்கள் மூக்கடைப்பு தூக்கமின்மை மூட்டுவலி முதுகுவலி மன இறுக்கம் போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.