பாடகர் எஸ்.பி.பி ஆரம்ப காலக்கட்டத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாடகர் எஸ்.பி.பி ஆரம்ப காலக்கட்டத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாடகர் எஸ்.பி.பீ நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உடல் காவல் துறையின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுத்து அஞ்சலி செய்தனர்.

திரையுலகில் 12 மொழிகளில் 42 ஆயிரம் பாடல்களை பாடி பெரும் கின்னஸ் செய்தவர் படிப்படியாக தான் இந்த நிலைக்கு உயர்ந்தார்.

சினிமா உலகில் டி.எம்.எஸ் புகழின் உச்சத்தில் இருந்த நேரம் எஸ்.பி.பீ சினிமாவுக்குள் வருகை தந்தார்.

இவருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் தான் மற்றொரு ஜாம்பவானான ஜேசுதாஸும் சினிமாவுக்கு வருகை தந்தார்.

இக்காலகட்டத்தில் எஸ்.பி.பீ ஒரு பாடலை பாட சம்பளமாக பெற்ற தொகை ரூ 150 அல்லது ரூ 200 தானாம். (இந்திய ரூபா) அந்த பணம் தன் தந்தைக்கு பயன்படுமே என கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வாராம்.