கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது நிர்வாக கட்டமைப்புடன் தொடர்புடைய விடயங்கள்,சமூக அபிவிருத்தி சமூக நலன் சார்ந்த விடயங்கள், மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி,வாழ்வாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.