கிளிநொச்சி கண்டாவளை யுவதி வீட்டுத்தோட்ட போட்டியில் முதலிடம்

கிளிநொச்சி கண்டாவளை யுவதி வீட்டுத்தோட்ட போட்டியில் முதலிடம்

இளைஞர்களை விவசாய நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்தும் செயற்பாடாக இளைஞர் யுவதிகள் மத்தியில் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் வீட்டுத்தோட்டம் போட்டிகள் இளைஞர் விவகார அமைச்சினால் இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட போட்டியில் 83 புள்ளிகளை பெற்று கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்த ப.கீர்த்திகா முதல் இடத்தையும் 75 புள்ளிகளை பெற்று கரைச்சி பிரதேசத்தை சேர்ந்த த.யாழினி இரண்டாம் இடத்தையும் 56 புள்ளிகளை பெற்று பூநகரி பிரதேசத்தை சேர்ந்த யோ.சிந்துயன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.