கிளிநொச்சி மாணவனின் தற்கொலைக்கு காரணம் இதுவா?: முன்னாள் காதலிக்கு ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பு!

கிளிநொச்சியில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வணிக பிரிவில் 3A எடுத்த மாணவன் காதல் விவகாரத்தினால் தற்கொலை செய்திருக்கலாமென அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் (21) அவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அன்று, அதிகாலை தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

i will die என அதில் அவர் பதிவேற்றிய வீடியோவில் இந்த உலகில் புகைத்தல், மது போதை இதெல்லாம் நினைச்சவுடன் விட்டிருலாம். அவர்கள் தங்களுக்கு என்று ஒரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்ளலாம். இவர்கள் கல்லூரிக்கு போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் விட கொடுமையான நோய் பயங்கரமான நோய் உயிர்கொல்லி நோய் என காணப்படுகிறது.

அவருக்கு ஒரு காதல் விவகாரம் இருந்ததாகவும், மாணவனிற்கு பின்னாளில் ஏற்பட்ட சில பழக்கங்கள் காரணமாக யுவதி பிரிந்து சென்றதாகவம் தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத தண்டவாளத்தில் மாணவன் அடிக்கடி நீண்டநேரமாக உட்கார்ந்திருப்பது வழக்கமென உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிரை மாய்ப்பதற்கு முன்னரும் முன்னாள் காதலிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவனான யோகேந்திரன் அயந்தன் (21) 2019 வணிகப்பிரிவில் தோற்றி, 3 ஏ பெறுபேறு பெற்றமை குறிப்பிடத்தக்கது.