கிளிநொச்சியில் ஒரு இளம் பெண்ணின் தொழில் முயற்சி!

கிளிநொச்சியில் ஒரு இளம் பெண்ணின் தொழில் முயற்சி!

ஊடகத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருபவர் பிரியா நடேசன். கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட அவர் சமூக செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டவர். நேற்று PNS Digital Online Market என்ற நிறுவனத்தை வைபவ ரீதியாக ஆரம்பத்து வைத்துள்ளார்.

அறிமுகம்-

“வணக்கம். நான் பிரியா நடேசன் இதுவரை காலமும் ஊடகத்துறையிலும் எழுத்து துறையிலும் பணியாற்றி வந்தேன். அத்தோடு சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வந்தேன்.

நீண்ட காலமாக என்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கம்பனியை உருவாக்க வேண்டும் என்ற ஓர் திட்டம் இருந்தது. அதனடிப்படையில் தற்பொழுது வெளிநாட்டு சந்தை ஒன்றை ஒன்லைன் இல் உருவாக்கியுள்ளேன்.

13/07/2020 அன்று என்னுடைய பிறந்த தினத்தில் PNS Digital Online Market என்ற வெளிநாட்டு சந்தையினை இலங்கையில் இயங்குதளத்தில் (ஒன்லைன் ) ஆரம்பித்து வைத்துள்ளேன்.

கடந்த வருடம் கம்போடியா சென்ற வேளை நான் அங்கே இருந்த இரவுச் சந்தையினை (Night Basar/Night Market) நன்கு அவதானித்த பின்னர் எனக்கு ஒரு இந்த யோசனை எழுந்தது. அதனைப் போல ஒரு இரவுச் சந்தையை இலங்கையில் அமைக்க வேண்டும் என்ற திட்டமும் என்னிடமுள்ளது.

அதனை செயல் வடிவமாக்கும் முகமாக ஒரு வெளி நாட்டு சந்தையினை ஒன்லைன் இல் முதல் முதலாக செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

இதனை எனது சொந்த முயற்சியிலே ஆரம்பித்தேன். இதன் போது எதிர்கொண்ட சவால் என்னவென்றால் போதியளவு பணம் என்னிடம் இருக்கவில்லை. இருந்த போதிலும் யாரிடமும் உதவி கேட்க விரும்பவில்லை. என்னுடைய ஐடியாவை சிலரோடு பகிர்ந்து கொண்ட போது ஆரம்பத்தில் இது சாத்தியப்படாது என்றே பலர் எதிர் மறையாக பேச ஆரம்பித்து விட்டனர். வேலையை திட்டமிட்டு செய்ய சரியான மனித வளம் கூட கிடைக்காத நிலையில் தனி ஒருத்தியாக இருந்து எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதாக போனதால் சமாளிப்பதும் கடினமாகிவிட்டது.

பிறகு வேலைக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டேன். அத்தோடு என்னுடைய குறிப்பிட்ட சில நண்பர்களும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். அதன் பின்னர் என்னுடைய வேலைகளுக்காக அப்பா தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து தந்தார். சில உறவுகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி – தமிழ்வணக்கம் ஊடகம்