யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவிக்கு கொரோனா தொற்று தொடர்பில் வெளியான அறிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவிக்கு கொரோனா தொற்று தொடர்பில் வெளியான அறிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவி மற்றும் யாழ்ப்பாணம் – கைதடி சித்த மருத்துவ பீட மாணவி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு கிடைத்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று (14) மாலை சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் கொரோனா தொற்று உறுதியான இராணுவ வீரர் ஒருவரின் சகோதரி மற்றும் காய்ச்சல் அறிகுறி காரணமாக பொலனறுவையை சேர்ந்த மாணவி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படியே அவர்களுக்கு தொற்று இல்லை என்பது இன்று (14) கிடைத்த முடிவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மூடப்பட்ட கிளிநொச்சி வளாகம் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பின்னரே திறக்கப்படும் என்று வளாகத்தின் பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.