Kilinochchi NET

வால்நட்டை இப்படி சாப்பிட்டால் நீங்க டாக்டர்கிட்ட போகவேண்டிய அவசியமே இருக்காது

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் வால்நட் பருப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வால்நட் பருப்பின் தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள்(Antioxidant) அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால்(Polyphenal) என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் வால்நட்டில், கொலஸ்ட்ரால் 0கி, சோடியம் 2மிகி, பொட்டாசியம் 441 மிகி, புரதச்சத்து 15கி, விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.