கிளிநொச்சியில் கோர சம்பவம்! சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் ஆரம்பமான விசாரணை

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.