பிரித்தானியாவில் பலர் மீது கத்தி குத்து தாக்குதல் – ஆபத்தான நிலையில் நால்வர்

பிரித்தானியாவில் Plymouth இரவு நேர விடுதியில் பலர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரித்தானியா நேரப்படி இரவு 10 மணியளவில் இந்த கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் அவ்விடத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர். எனினும் சந்தேக நபர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனினும் சற்று நேரத்திற்கு பின்னர் கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 50 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் இருந்து நபர் ஒருவர் தப்பி செல்வதனை அவதானித்தே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென நுழைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த கத்தி குத்து தாக்குதலுக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.