கொழும்பில் நாளை முதல் கடுமையாக அமுலாகும் வீதி ஒழுங்கு சட்டம்

நாளை முதல் வீதி ஒழுங்கு சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள நான்கு வீதிகளின் ஒழுங்கு சட்டம் கடந்த 14ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி பாகாப்பு தொடர்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

பேருந்து பயணிக்கும் பகுதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக இடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நான்கு வீதித் தடங்களில் இடது பக்கம் உள்ள முதலாவது மற்றும் இரண்டாவது தடங்களில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று வீதி தடங்கள் உள்ள வீதிகளில் இடது பக்கம் முதலாவது தடத்தில் பேருந்துகள் பயணிக்க முடியும். இரண்டாவது தடத்தில் முன் திருப்பி செல்ல முடியும்.

ஏனைய வாகனங்களுக்கு நெருக்கடி இன்றி பயணிக்க முடியும் என இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் ஸ்ரீஜயவர்தனபுர மாவத்தை, பேஸ்லைன், ஹெய்லெவல் மற்றும் காலி வீதி என்ற நான்கு இலக்க வீதியை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்போது ட்ரோன் கமரா மற்றும் சிசிரீவி கமரா கட்சிகள் மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்படும் எனவும் அதற்கு இராணுவத்தினரின் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.