பாரிய நில அபகரிப்பு மோசடிகளின் முக்கியஸ்தர் உட்பட மூன்று பேர் கைது

சிலாபம், மாரவில மற்றும் முந்தல் பகுதிகளில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த பாரிய நில அபகரிப்பு மோசடிகளின் முக்கியஸ்தர் உட்பட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் ஒருவரும் மாரவிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்து வந்ததாகவும், பல்வேறு முகவரிகளில் வசித்து வருவதாகவும், அவர்களின் தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.