Kilinochchi NET

தலைமுடி கொட்றத நிறுத்தி அடர்த்தியா வளர வைக்க அசத்தல் முறை

தினமும் 50-80 முடிகள் உதிர்ந்தால், அது இயல்பே. அதுகூட விழக்கூடாது என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. காரணம், அது முடி வளர்ந்து விழுவதின் சுழற்சி.

இந்த முறையை ஆனாஜென்,கெடாஜென் மற்றும் டெலோஜென் என்று கூறுவார்கள். ஆனாஜென் என்பது, முடி வளரும் நிலை, கெடாஜென் என்பதில் முடி மேற்கொண்டு வளராது, விழவும் விழாது.

ஆனால், டெலாஜென் என்ற கட்டத்தை அடையும் போது முடி உதிர்ந்துவிடும். இவ்வாறு உள்ள இந்த சுழற்சியில், ஒருவருக்கு ஒரு நாளுக்கு 100 முடிகள் வரை கொட்டலாம்.

ஆனால் அதற்கும் மேலாக, 150 முடிகளோ அல்லது நீங்கள் ஒவ்வொரு முறையும் வாரும்போதோ முடி உதிர்ந்தால், முடியின் மீது கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்