Kilinochchi NET

ஜில்லுனு ஒரு ஜூஸ் முடி கொட்டாமல் வளர, இளநரை மறைய, உடல் குளிர, கொழுப்பு கரைய

ஜில்லுனு ஒரு ஜூஸ் முடி கொட்டாமல் வளர, இளநரை மறைய, உடல் குளிர, கொழுப்பு கரைய

இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன.

இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.

நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும். நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது.

காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்