Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
இலங்கை சிங்கள அரசின் 74 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரி நாளாக நேற்று அனுஷ்டிக்கபட்டது.
உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களினை தமிழ் மக்கள் நடாத்தினர். இதில் குறிப்பாக பிரித்தானியாவில் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ் சொலிடரிடி ஆகிய அமைப்புக்கள் இணைந்து காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிய போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இப்போராடத்தில் பெருந்திரளான பொதுமக்கள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழம் கேட்பவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களை கொன்றொழிப்பதிலேயே இலங்கை அரசாங்கம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து செய்து வருகின்றது.
தமிழீழ தலைநகரம் திருகோணமலையில் சிங்க கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்ற முனைந்த தியாகி திருமலை நடராஜன் அரச படைகளால் கொல்லப்பட்டது, 1956 இனக்கலவரம், 1983 கறுப்பு ஜூலை மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று தனது கட்டமைக்கப்பட்ட அழிப்பினை தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடாத்தி கொண்டு வருகின்றது.
இதன் அண்மை நிகழ்வுகளாக சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்பட்டது,
அத்தோடு முக்கியமாக தற்போதைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் முன்னாள் பாதுக்காப்பு செயலாளரும் ஆகிய கோட்டாபய ராஜபக்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 20000 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற கூற்றை வெளிப்படுத்திருப்பது பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையை விடுபடச்செய்வதாகவுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளமையும்குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்கான நிரந்தர தமிழீழம் அமையும் வரை தமிழர்களின் போராட்டம் அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ந்து கொண்டேயிருக்கும்.